ராஜ்யசபா தேர்தலில் பாஜக சித்து விளையாட்டு: குஜராத் காங். எம்எல்ஏக்கள் 44 பேர் பெங்களூரில் தங்கவைப்பு
ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை வளைத்துப் போட குஜராத்தில் பாஜக சித்து விளையாட்டில் இறங்கியுள்ளது. இதனைத் தெரிந்து கொண்ட காங்கிரஸ் மேலிடம் 44 எம்எல்ஏக்களை பெங்களூருக்கு அழைத்துச் சென்று தனிப
ஆமதாபாத்: ராஜ்ய சபா தேர்தல் வரும் 8ம் தேதி குஜராத்தில் நடைபெற உள்ளதால், 44 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில், 3 ராஜ்ய சபா இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 8ம் தேதி நடக்கிறது. இந்த மூன்று இடங்களுக்கும் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி மற்றும் அமித்ஷா ஆகியோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் அகமது பட்டேலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற 44 எம்எல்ஏக்களின் வாக்குகள் அவசியம். சூழல் இப்படி இருக்க நேற்று ஒரே நாளில் மட்டும் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தாவிவிட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்து வருகிறது.
இதனால் காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றிக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது வெற்றிக்கு 44 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்பதாலும், இவர்கள் பாஜகவிற்கு தாவி விடக் கூடாது என்பதற்காகவும், இரவோடு இரவாக எம்எல்ஏக்கள் பெங்களூரு கடத்திச் செல்லப்பட்டனர்.
காங்கிரஸ் எம்எல்ஏக்களை வளைக்க பாஜசு திட்டமிடுவதைத் தெரிந்து கொண்ட காங்கிரஸ் அதனை முறியடிக்க இத்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. இந்த 44 எம்எல்ஏக்களும் ஆமதாபாத் விமான நிலையம் வந்து அங்கிருந்து பெங்களூரு சென்றுள்ளனர். தமிழகத்தில் நடைபெற்ற கூவத்தூர் நாடகம் போன்று இருக்கும் இந்த நாடகமும் ராஜ்ய சபா தேர்தல் வரை நீடிக்கும் என்று தெரிகிறது.
-
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கைமாறிய 12 வருட மனைவி.. குஜராத் கணவர் தந்த புகாரில் செம ட்விஸ்ட்.. அலறியடித்து ஓடிய 10 பேர் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications