கேதார்நாத் வெள்ளத்தில் இறந்த 44 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
டேராடூன்: கேதார்நாத்தில் கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது இறந்தபோன 44 பேரின் எலும்புக் கூடுகள் கண்டறியப் பட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெய்த கனமழை , வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏராளமானோர் பலியாகினர்.
இந்தப் பேரழிவில் தமிழகத்திலிருந்து சென்ற சுற்றுலாப் பயணிகளும் மாட்டித் தவித்தனர்.
வெள்ளத்தால் விபரீதம்:
குறிப்பாக புனித தலங்களான பத்ரிநாத், கேதார்நாத் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல பேர் காணாமல் போனார்கள். அதன்பின்னர் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அங்கு இயல்பு நிலை திரும்பியது.
அதிவிரைவுப்படை தேடுதல்:
ஆனால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் இறந்து வனப்பகுதியில் ஆங்காங்கே உடல்கள் கிடக்கலாம் என்று செய்தி பரவியதால் உடல்களை தேடும் பணிக்காக அதிவிரைவுப்படை அமைக்கப்பட்டது.
44 எலும்புக்கூடுகள்:
22 வீரர்கள் கொண்ட இந்த படையினர் மார்ச் மாதம் முதல் இதுவரை கேதார் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் தேடி 44 எலும்புக் கூடுகளை கண்டுபிடித்து தகனம் செய்துள்ளனர்.
தேடுதல் பணி தொடரும்:
வனத்துறையினரின் உதவியுடன் புவியமைப்பு வரைபடத்தை வைத்து வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் எந்த உடல்களும் கைப்பற்றப்படவில்லை என்றும் காவல்துறை தலைவர் தெரிவித்தார். எனினும், அனைத்து உடல்களும் மீட்கப்படும் வரை தேடுதல் பணி தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் சூடு:
மழை வெள்ளம் ஏற்பட்டு ஒரு வருடம் கழித்து உடல்களின் எலும்புக்கூடுகளைக் கண்டறிந்துள்ளதால் உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் அரசியல் சூடுபிடித்துள்ளது.
பதவி விலக வலியுறுத்தல்:
இந்த விஷயத்தில் மற்றவர்களை குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு முதல்வர் ஹரிஷ் ராவத் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான பாஜக வலியுறுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications