ஆந்திராவில் கொடூரம்.. விஷம் வைத்து 45 குரங்குகள் கொலை.. வனத்துறை விசாரணை
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 45 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சிலகம் கிராமத்திற்கு அருகில் வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து கிராம மக்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது குரங்குகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. குட்டிகள் உள்பட 45 குரங்குகள் குவியலாக இறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் குரங்குகளின் உடல்களை கைப்பற்றினர். பின்னர் கால் நடை மருத்துவர்கள் மூலம் அங்கேயே அந்த குரங்குகளின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. குட்டிகள் உள்பட மொத்தம் 45 குரங்குகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அந்த குரங்குகள் சிலகம் கிராமத்தை சேர்ந்த குரங்குகள் இல்லை என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

எனவே வேறு இடத்தில் அந்த குரங்குகளுக்கு விஷம் வைத்து கொன்றுவிட்டு பின்னர் ஏதேனும் வாகனங்கள் மூலம் இந்த வனப்பகுதியில் போட்டிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போல் கடந்த ஆண்டு பெங்களூருவில் ஹாசன் மாவட்டத்தில் 38 குரங்குகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அது போல் இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குள் மேலும் 40 குரங்குகள் கொல்லப்பட்டன. இவற்றிற்கு வாழைப்பழத்தில் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது.
-
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications