மைனர் சிறுமியை இரண்டாவதாக மணக்க திட்டம்.. ஜார்கண்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை
ஜார்கண்டில் மைனர் சிறுமி ஒருவரை இரண்டாவது தாரமாக மணக்க அனுமதிதராத காரணத்தால் அந்த சிறுமியும், அவளது குடும்ப உறுப்பினர்களும் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ராஞ்சி: ஜார்கண்டில் மைனர் சிறுமி ஒருவரை இரண்டாவது தாரமாக மணக்க அனுமதிதராத காரணத்தால் அந்த சிறுமியும், அவளது குடும்ப உறுப்பினர்களும் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ஜாம்ஷெட்புரை சேர்ந்த ராம் சிங், பானா குயி, ரம்பா, காந்தே, சோனியா ஆகியோர் இதில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் ரம்பாவை திருமணம் செய்து கொல்ல விருப்பப்பட்டு அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பெண் கேட்டு இருக்கிறார்.
அவருக்கு பெண் கொடுக்க ரம்பா குடும்பத்தினர் மறுத்துள்ளார். இதனால் தற்போது அந்த குடும்பம் மொத்தமாக கொடுரமாக கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

மைனர் பெண்
அந்த குடும்பத்தில் இருக்கும் ரம்பா என்ற 17 வயது சிறுமியை கல்யாணம் செய்து கொள்ள, பெண் கேட்டு அதே அப்பகுதியை சேர்ந்த பெரிய நபர் ஒருவர் வந்துள்ளார். ஆனால் அவருக்கு ஏற்கனேவே திருமணம் ஆகிவிட்டது என்று கூறப்படுகிறது. இதனால் ரம்பாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவருக்கு பெண் தர மறுத்து இருக்கிறார்கள்.

கொலை செய்தார்கள்
இதனால் கோபமடைந்த அந்த நபர், தன்னுடன் 10 பேரை அழைத்து வந்து அந்த குடும்ப நபர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார். இதில் அந்த குடும்பத்தில் ரம்பா உட்பட 5 பேரும் மரணம் அடைந்து இருக்கிறார்கள். அவர்கள் உடலை அங்கு இருக்கும் காட்டுப்பகுதியில் இரவோடு இரவாக புதைத்து இருக்கிறார்கள்.

மார்ச் 10ம் தேதி
இந்த கொலை சம்பவம் கடந்த மார்ச் 10ம் தேதி நடந்தாலும், அந்த ஊரில் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் அந்த காட்டுப்பகுதியில் வேலை செய்தவர்கள் 5 பேரின் உடலை கண்டுபிடித்து போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்கள். அதன்பின் போலீஸ் விசாரணை செய்து கொலையாளிகளை கண்டுபிடித்துள்ளார்கள்.

10 பேர் கைது
இந்த கொடுர செயலை செய்த 10 நபர்களும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த பத்து பேரும் மேல் சாதியை சேர்ந்தவர்கள் என்பதாலும், அரசியல் பின்புலம் உள்ளவர்கள் என்பதாலும் போலீஸ் இன்னும் அவர்கள் பெயர்கள், விவரங்களில் வெளியிடவில்லை. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications