இந்தா.. வந்துட்டாங்கல்ல.. நான்-வெஜ் டெலிவரி கூடாது.. பாஜக ஆளும் மாநிலங்களில் சிக்கிய ஜொமாட்டோ
அயோத்தி: அயோத்தியில் நேற்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்தது. இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் உத்தர பிரதேசம் உள்பட பாஜக ஆளும் 5 மாநிலங்களில் ‛‛அசைவ உணவு டெலிவரி செய்யாதீங்க'' என ஜோமட்டோ நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்த தகவல் வெளியாகி உள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. கோவில் கருவறையில் நிறுவப்பட்ட 5 வயது குழந்தை பருவ ராமர் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை சடங்குகளை பிரதமர் மோடி செய்தார். அதன்பிறகு ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது.

அயோத்தி ராமர் கோவிலில் இன்று முதல் மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். காலை முதல் மக்கள் கூட்டம் என்பது அலைமோதி வருகிறது. காலையில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இன்று முதல் இன்னும் 2 வாரங்கள் வரை தினமும் 5 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தினமான நேற்று பாஜக ஆளும் 5 மாநிலங்கள் சார்பில் ஜோமட்டோ நிறுவனத்திடம் அசைவ உணவு டெலிவரி செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளது. அதாவது அயோத்தி அமைந்துள்ள உத்தர பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலங்கள் சார்பில் தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பொதுமக்களுக்கு அசைவ உணவு டெலிவரி செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hi, we have disabled delivery of non-veg items in Uttar Pradesh, Assam, Chhattisgarh, Madhya Pradesh and Rajasthan as per govt. notice. Hope this clarification helps!
— zomato care (@zomatocare) January 22, 2024
இதனை ஜோமட்டோ நிறுவனமும் ஏற்றுக்கொண்டது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் Zomato Care எனும் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஹாய், அரசு வழங்கிய நோட்டீஸ் அடிப்படையில் உத்தர பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அசைவ உணவு டெலிவரி செய்வதை நிறுத்தி வைத்துள்ளோம். இந்த அறிவிப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்'' என தெரிவித்தது. மேலும் அசைவ உணவு டெலிவரி செய்வதையும் நிறுத்தியது.
முன்னதாக இன்னொரு ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில், ‛‛உத்தர பிரதேசத்தில் ஜனவரி 22ம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் உங்களின் அசைவ உணவு ஆர்டர்கள் நிறுத்தப்படுவதோது, இந்த ஆர்டர்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Welcome to New India. We now don’t have the right to choose our food. Businesses must suffer to appease the majority. This is a fascist country.
— Mrinal (@mrinaaal) January 22, 2024
Shame on you @zomato and @Swiggy. pic.twitter.com/tdmiXxgCOa
இந்நிலையில் தான் மாநில அரசு மற்றும் ஜோமட்டோ நிறுவனத்தின் இந்த செயலை நெட்டிசன்களில் ஒரு பகுதியில் வரவேற்றுள்ள வேளையில் இன்னொரு தரப்பு கொந்தளித்துள்ளனர். Mrinal என்பது தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛புதிய இந்தியாவிற்கு வரவேற்கிறோம். இப்போது உணவை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட நம்மிடம் இல்லை. பெரும்பான்மையாக இருப்பவரை திருப்திப்படுத்த வணிகங்கள் பாதிக்கப்படுகிறது. இது ஒரு பாசிச நாடு. ஜோமட்டோ மற்றும் ஸ்விக்கிற்கு இது அவமானம்'' என கோபத்தை கொப்பளித்துள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications