காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்.. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஷ்மீர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 6 பேர்வரை இதில் மோசமாக காயம் அடைந்து இருக்கிறார்கள்.

காஷ்மீர் அருகே இருக்கும் சுஞ்வான் பகுதியில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. நேற்று அதிகாலை தீவிரவாதிகள் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்.

5 soldiers killed in terror attack on army camp in JK

இந்த தாக்குதல் நேற்று காலை ஆரம்பித்து நேற்று மதியம் வரை தீவிரமாக நடந்தது. அதன்பின் மீண்டும் இந்திய ராணுவம் திரும்பி தாக்கியது.

இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இப்போதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இதில் காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Pakistan terrorists attacks again in Kashmir border. It fired in heart of JK. Due to this attack 5 army men killed, 4 Injured.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற