ஜம்மு- காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பந்திபோரா மாவட்டத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர் : ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பந்திபோரா மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி கிடப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உள்ளூர் போலீஸாருடன் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பந்திபோராவில் ஹஜீன் என்ற கிராமத்தில் சோதனை செய்த போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இதில் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அங்கு பதுங்கியிருப்போரை பிடிப்பதற்காக போலீஸாரின் தேடுதல் வேட்டை தொடர்கிறது.












Click it and Unblock the Notifications