ஜார்க்கண்டில் 6 ஆண்டுகளில்.. பசு வதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவான 53 பேர் விடுவிப்பு
ராய்ப்பூர்: ஜார்க்கண்டில் 6 ஆண்டுகளில் பசு வதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவான 53 பேர் விடுவிக்கப்பட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பசு கடத்தல் விவகாரத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு 4 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். அது போல் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் பசு வதைக்காக மாடுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது போல் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளில் இது வரை 53 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் பசுவை வதைத்ததற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி 53 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
அந்த 53 பேரில் ஒருவர் பலி முண்டா. இவர் பசு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் தவறாக கைது செய்யப்பட்டு 89 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். குந்தி மாவட்டத்திலிருந்து அவரது கிராமத்திற்கு 21 முறை நடையாய் நடந்ததையும் வழக்கு செலவிற்காக உறவினர்களிடம் ரூ 14 ஆயிரம் செலவிட்டதையும் அவரால் மறக்க முடியவில்லை.
தான் உயிரோடு இருப்பதே அதிர்ஷ்டம் என்கிறார். அவர் கடந்த ஜனவரி மாதம் போதிய ஆதாரம் இன்றி விடுவிக்கப்பட்டார். கடந்த வாரம் ஜார்க்கண்டில் ஒரு மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரை பசு வதை செய்ததாக கடந்த வாரம் 3 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கினர். அது போல் முண்டாவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 2017ம் ஆண்டு பசு பாதுகாப்பு குழுவினரால் தாக்கப்பட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications