ஆந்திராவில் செம்மரம் வெட்ட முயன்றதாக 150 தமிழர்கள் கைது!
அமராவதி: ஆந்திராவில் செம்மரம் கடத்த முயன்றதாக தமிழகத்தை சேர்ந்த 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா, மதுக்கூர் அருகேயும், திருப்பதி வனப்பகுதியிலும் உள்ள செம்மர காடுகளில், கடத்தல்காரர்கள் புகுந்துள்ளதாக செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முதல்கட்டமாக 55 பேரும் அடுத்தடுத்த தேடுதல் நடவடிக்கைகளில் மொத்தம் 150 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்த சென்ற தமிழர்கள் என தெரியவந்துள்ளது. செம்மர கடத்தல் கும்பல், வறுமையில் வாடும் தமிழர்களை, செம்மரம் வெட்ட பயன்படுத்தப்படுவதாக ஆந்திர அரசு குற்றம்சாட்டி வரும் நிலையில் இன்று இந்த கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
தேடுதல் நடவடிக்கை தொடருவதால், கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சேஷாத்திரி வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 2015ம் ஆண்டு, 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications