58 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுப்பு..அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட ராணுவ அதிகாரி உடல்..என்ன காரணம்?
கொல்கத்தா: இந்தியாவில் 58 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாவிற்கு வந்த போது உயிரிழந்த அமெரிக்க ராணுவ அதிகாரியின் உடல் இந்தியாவிலேயே அடக்கம் செய்யப்பட்டது. தற்போது அந்த உடலின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் சொந்த நாட்டிற்கே கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? என்பது குறித்த விவரங்கள் வருமாறு:
அமெரிக்க ராணுவத்தில் ஹாரி கிளீன் பெக் பிக்கெட் என்பவர் மேஜர் ஜெனரல் பதவி வகித்தார். 1913 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் சேர்ந்த கிளீன் பெக் பிக்கெட், அமெரிக்காவில் மிகவும் பிரபலமான ராணுவ அதிகாரியாக இருந்தார். 1914 ஆம் ஆண்டு முதல் 1918- ம் ஆண்டு வரை நடைபெற்ற முதல் உலகப் போர் மற்றும் 1939-1945 வரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரிலும் இவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 1965- ஆம் ஆண்டு இந்தியாவிற்கு ஹாரி கிளின் பெக் சுற்றுலா வந்தார். அப்போது புகழ்பெற்ற சுற்றுலா தளமான மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் சென்ற போது மாரடைப்பால் காலமானர். இதையடுத்து, பிக்கெட்டின் உடல் டார்ஜிலிங்கில் உள்ள சிங்கடம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டதாம். ஆனால், பிக்கெட்டின் உடலை அமெரிக்காவில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதே அவரது குடும்பத்தினரின் விருப்பமாக இருந்துள்ளது.
இதையடுத்து அமெரிக்க அரசு இந்திய அரசுடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. டார்ஜிலிங் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒரு தனியார் சேவை நிறுவனத்தின் உதவியுடன் அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரி பிக்கெட்டின் கல்லறை ஒரு வழியாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து, அவரது உடலின் எச்சங்கள் தோண்டியெடுத்து அமெரிக்க கொண்டு செல்லப்பட்டது. அதாவது 58 ஆண்டுகளுக்கு பிறகு உடல் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க துணை தூதர் மெலிண்டா பாவக், "முன்னாள் மேஜர் ஜெனரல் பிக்கெட்டின் உடலை அவரது குடும்பத்தினர் விருப்பப்படி மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல இருப்பது பெருமை அளிக்கும் விஷயம் ஆகும். இதற்காக உதவிகரமாக இருந்த இந்திய அரசாங்கத்திற்கும் டார்ஜிலிங் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.
அதேபோல், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் எரிக் கார்செட்டி கூறுகையில், மேற்கு வங்காளம் மற்றும் டார்ஜிலிங் மாவட்ட நிர்வாகம் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதன் அடிப்படையில் தான் இது சாத்தியம் ஆனது. முன்னாள் ராணுவ அதிகாரி பிக்கெட்டின் உடலை அவரது நேசத்திற்குரிய குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உதவியாக இருந்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா அமெரிக்கா நட்புறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக இது அமைந்து இருக்கிறது" என்றார்.
-
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
Hormuz: ஹார்முஸ் ஜலசந்தி திறக்குமா? திறக்காதா? 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் அளித்த ரிப்ளை -
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications