காஷ்மீரில் தொடர் மழைக்கு 6 பேர் பலி – பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தொடர் மழைக்கு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஜீலம் நதியில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் முதல்வர் முப்தி முகமது சயீத் தலைமையில் பி.டி.பி -பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் இந்த ஆண்டும் கன மழை பெய்யத் துவங்கியுள்ளது. இம்மாநில மாவட்டங்களில் பரவலான மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ள பாதிப்பில் 16 பேர் பலியாகியுள்ளனர். மீட்பு நடவடிக்ளுக்காக தேசிய பேரிடர் மேலாண்மைகுழுவினர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.
கனமழையால் அங்கு பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப்பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக்குழுவைச் சேர்ந்த 100 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் முப்தி முகமது சயீத் நேரில் ஆய்வு செய்தார். வெள்ள பாதிப்புகளை மதிப்பிட அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியை மத்திய அரசு நியமித்துள்ளது.
இதற்கிடையே ஜம்மு, காஷ்மீர் முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெள்ள பாதிப்புகளை சீர் செய்ய அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
இதனிடையே புர்கம் மாவட்டத்தில் கனமழையால்ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications