நேபாளத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம்.. வீடு இடிந்து 6 பேர் பலி.. டெல்லியிலும் குலுங்கிய கட்டடங்கள்
காத்மாண்டு: நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
நேபாள நாட்டின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. இதுபற்றி நேபாள தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், நேபாள நாட்டின் மேற்கே நேற்றிரவு 9.07 மணியளவில் ரிக்டரில் 5.7 அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் இரவு 9.56 மணியளவில் ரிக்டரில் 4.1 அளவிலான மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் பின்னர் இன்று அதிகாலை 2.12 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவானது. நேபாள நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் டோடி மாவட்டத்தின் உள்ள வீடு இடிந்து 6 பேர் உயிரிழந்தனர்.

டெல்லியில் உணர்ந்த மக்கள்
நேபாள எல்லையை ஒட்டிய உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகருக்கு தென்கிழக்கே 90 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் டெல்லி, குருகிராம், காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பொதுமக்கள் தூக்கித்தில் இருந்து எழுந்துள்ளனர்.

மத்திய அமைச்சர் ட்வீட்
இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் மீனாக்ஷி லேகி தனது ட்விட்டர் பக்கத்தில், ட்வீட் செய்ய விரும்பவில்லை, ஆனால் அது ஒரு நிலநடுக்கத்தை உணர்ந்தேன் என்று ஒருவர் நிச்சயமாக சொல்ல முடியும் என்று பதிவிட்டுள்ளர். இதேபோல் காங்கிரஸ் பிரமுகர் ராதிகா கேரா, மக்கள் விழிப்புடன் இருக்கவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம்
அதுமட்டுமல்லாமல் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத பாதிப்புகள் விவரம் இதுவரை கணக்கிடப்படவில்லை. அதேபோல் நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் நேற்று காலை 4.37 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி இருந்தது. நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடகிழக்கே 155 கி.மீ. தொலைவில் நேற்று காலை 4.37 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications