கணக்கில் வராத பல்வேறு சொத்துக்கள்.. 900 கோடிக்கு 6 வீடுகள்.. அதிர வைக்கும் நீரவ் மோடி!
நீரவ் மோடியின் பல்வேறு சொத்துக்கள் தற்போது சிபிஐ மூலம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.
Recommended Video

டெல்லி: நீரவ் மோடியின் பல்வேறு சொத்துக்கள் தற்போது சிபிஐ மூலம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. 6 வீடுகளுக்கு மட்டும் இவர் 900 கோடி செலவு செய்து இருக்கிறார் என்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
இதில் பல்வேறு இடங்களில் பல்வேறு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. நீரவ் மோடி தற்போது அமெரிக்காவில் தலைமறைவாகி இருக்கிறார்.

எவ்வளவு பறிமுதல்
நீரவ் மோடியின் நிறுவனங்கள், வீடுகள் உட்பட 17 இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இவருக்கு நெருக்கமானவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தினார்கள். ரூ.5,100 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம், வைரம் உள்ளிட்ட பொருட்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

எவ்வளவு சொத்து
இப்போது வரை இவரிடம் 23 அசையா சொத்துக்கள் பல்வேறு இடங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தமாக 10 வீடுகள் இவர் மற்றும் இவரின் மனைவி பெயரில் இருக்கிறது. இதில் பெரும்பாலான சொத்துக்கள் மோசடி நடந்த மும்பையில் இருக்கிறது.

கடல் நோக்கிய வீடுகள்
இந்த 10 வீடுகளில் கடல் பார்த்த வீடுகள் மட்டும் 6 இருக்கிறது. இந்த ஆறும் மும்பையில் உள்ளது. இதில் ஒரு வீட்டின் மதிப்பு 150 கோடி. ஆறு வீடுகளின் மதிப்பு மொத்தமாக 900 கோடி ஆகும்.

மறைத்து வைத்து இருக்கிறார்
அதேபோல் அவரது நண்பர்களும் இந்த சோதனை வட்டத்தில் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு சொந்தமான சொந்தமான இடங்களிலும் கோடிக்கணக்கில் பணம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சொத்துக்கள் மட்டுமே பல்லாயிரம் கோடிகளை தாண்டும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications