ஐதராபாத்தில் 6 தீவிரவாதிகள் கைது... சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதியா?
ஐதராபாத் : பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் மியான்மார் நாட்டை சேர்ந்த தீவிரவாதிகள் 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க அவர்கள் சதி செய்துள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டின் சுதந்திர தினம், நாளை கொண்டாடப்படுகிறது. அண்மையில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரிலும், காஷ்மீர் மாநிலம் உதம்பூரிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதை கருத்தில் கொண்டு, நாடுமுழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. துணை ராணுவப் படை வீரர்கள் நாடு முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் மியான்மார் நாட்டை சேர்ந்த 6 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் ஐதராபாத் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி தீவிரவாத இயக்கத்துடன் தொடர்ந்து உடைய தீவிரவாதி முகமத் நசீரை கைது செய்தனர். இதனையடுத்து சிறப்புபடை ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உடைய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவரையும், வங்கதேசம் நாட்டை சேர்ந்த இரண்டு பேரையும், மியான்மர் நாட்டை சேர்ந்த ஒருவரையும் கைது செய்தனர்.
அவர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் தங்கி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த இரண்டு ஏஜெண்ட்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குற்றத்திற்குட்படக்கூடிய ஆவணங்கள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications