பிரசித்தி பெற்ற கோயில் திருவிழாவில் கூட்டநெரிசல்! பக்தர்கள் 7 பேர் பலி! பலர் படுகாயம்! கோவாவில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

கோவா: கோவா மாநிலம் ஷிர்காவில் உள்ள லைராய் சத்ரா கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலம் ஷிர்கோ பகுதியில் ஸ்ரீ லைராய் சத்ரா என்ற கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று மாலை திருவிழாவில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

Goa stampede temple

அருகில் இருந்த ஊர்களிலும் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் கூடியிருந்த நிலையில், கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டது. இந்த பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கூட்ட நெரிசல் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று கோவா முதல்வர் நலம் விசாரித்தார். பிரதமர் மோடியும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்தை தொலபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சூழல் குறித்து கேட்டறிந்துள்ளார்.

கோயில் திருவிழாவில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி என்பது குறித்த முழுமையான தகவல்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. ஷைராகோவில் உள்ள ஸ்ரீ லைராய் தேவி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஸ்ரீ லைராய் சத்ரா ( ஊர்வலம்) மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக சொல்லப்படுகிறது.

மாநிலம் முழுவதும் இருந்து இந்த கோயிலுக்கு பக்தர்கள் வருகை தந்து பார்வதி அம்மனை தரிசிப்பார்கள். இந்த கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்குதல் நிகழ்வும் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தங்கள் நேர்த்திக்கடன்களை செய்வார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+