மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 7 பேர் பலி; பலர் படுகாயம்
மும்பை: மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
தெற்கு மும்பை பகுதியில் உள்ள கெம்ப்ஸ் கார்னர் பகுதியில் 26 மாடிகளை கொண்ட 'மாண்ட் பிளாங்க்' என்ற சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது.

இந்த குடியிருப்பின் 12வது மாடியில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் 14 தீயணைப்பு வாகனங்கள், 7 தண்ணீர் லாரிகள், 4 ஆம்புலன்ஸ்களில் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இன்று அதிகாலை வரை நூற்றுக்கணக்கான வீரர்கள் வெகுதீவிரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தின்போது வீடுகளில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் அங்கு வசிக்கும் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2 அதிகாரிகள் உள்பட 5 மீட்புப் படையினரும் தீயில் சிக்கி படுகாயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications