மத்தியப் பிரதேச சிறையில் இருந்து 7 'சிமி' தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
போபால்: மத்தியப் பிரதேச மாநில சிறையில் இருந்து சிமி இயக்கத் தீவிரவாதிகள் 7 பேர் தப்பிவிட்டனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கந்துவா சிறைச்சாலையில் சிமி இயக்கத் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 7 தீவிரவாதிகள் இன்று அதிகாலையில் சிறைக் கழிவறையின் சுவற்றை உடைத்துக் கொண்டு தப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சிறையில் இருந்து தப்பித்து செல்ல முயன்ற தீவிரவாதிகளை சிறைக்காவலர்கள் தடுத்துள்ளனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், சிறைக் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 2 சிறைக் காவலர்கள் பலத்த காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தப்பி ஓடியவர்களில் ஒரு தீவிரவாதியை கைது செய்துள்ள மத்திய பிரதேச போலீசார், மற்ற 6 தீவிரவாதிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications