‛வரமறுத்த ஆம்புலன்ஸ்’.. மாரடைப்பால் துடித்த தந்தை.. தள்ளுவண்டியிலேயே மருத்துவனை கூட்டி சென்ற சிறுவன்
போபால்: பணம் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக ஆம்புலன்ஸ் வர மறுத்ததால், நெஞ்சு வலியால் துடித்த தனது தந்தையை 7 வயது மகன் தள்ளுவண்டியில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பரிதாப சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
ஏழை மக்களுக்காகவே கொண்டு வரப்பட்ட அரசு ஆம்புலன்ஸே, தற்போது பல இடங்களில் மக்களிடம் பணம் கேட்பதே இந்த அவலநிலைக்கு காரணமாக உள்ளது.
இந்நிலையில், சிறுவன் தனது தந்தையை தள்ளுவண்டியில் கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் இதுகுறித்த விசாரணைக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஏழைகள் என்றால் இளக்காரமா?
சமீபகாலமாக, பெரும்பாலான மனிதர்களிடத்தில் மனிதநேயம் என்ற குணமே இல்லாமல் போய்விட்டதாக தோன்றுகிறது. பணம் இருப்பவர்களிடத்திலும், இல்லாதவர்களிடத்திலும் இந்த உலகம் காட்டும் பாரபட்சம் மோசமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அமரர் ஊர்தியில் எடுத்துச் செல்ல பணம் இல்லாததால் இறந்த குழந்தையின் உடலை சுமந்து சென்ற தந்தை; ஆம்புலன்ஸ் வராததால் பிரசவ வலியால் துடித்த மனைவியை கை வண்டியில் இழுத்து சென்ற கூலித்தொழிலாளி என்பன போன்ற கொடுமையான நிகழ்வுகளை அடிக்கடி பார்க்க முடிகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

ஆம்புலன்ஸுக்கு பணம்
மத்திய பிரதேச மாநிலம் சிங்ரவுலி மாவட்டம் பைலாரி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் (48). கூலித் தொழிலாளியான இவருக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில், ரமேஷ் குமாருக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து பதறிப்போன அவரது மனைவி, உடனே அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளார். அதற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரூ.200 பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர்களிடம் அந்த பணம் இல்லை.

தள்ளுவண்டியில்..
பணம் இல்லை எனக் கூறியதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வர மறுத்தவிட்டார். இதனால் அவரது மனைவிக்கு என்ன செய்வதென தெரியவில்லை. இந்நிலையில், தனது வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு தள்ளுவண்டியை கொண்டு வந்து, அதில் தனது கணவரை படுக்கச் செய்தார். பின்னர் அவரும், அவரது 7 வயது மகனும் அந்த தள்ளுவண்டியை சுமார் 5 கி.மீ. தூரம் தள்ளிச் சென்று அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணைக்கு உத்தரவு
இந்த காட்சியை அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவி பெரும் பூதாகரமானது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பிரதேச சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications