நாகாலாந்துக்கு இறைச்சிக்காக கடத்தப்பட்ட 75 'அஸ்ஸாம்' தெருநாய்கள்- 4 பேர் கைது
நாகாலாந்துக்கு இறைச்சிக்காக 75 அஸ்ஸாம் நாய்கள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாய்களை கடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குவஹாத்தி: இறைச்சிக்காக அஸ்ஸாமில் இருந்து நாகாலாந்துக்கு 75 தெருநாய்களை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகாலாந்துவாசிகள் பாம்பு, தவளை, எலி, பூச்சிகள் என அனைத்தையும் சாப்பிடுகிறவர்கள். நாகாலாந்து தலைநகர் கோஹிமா சந்தையில் இவற்றையெல்லாம் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும்.
கோஹிமாவில் இருக்கும் நாய்க்கறி சந்தை திகிலூட்டக் கூடியதாக இருக்கும். நாய்களை கொடூரமாக அடித்தே கொலை செய்து கூறு போட்டு விற்பனை செய்யும் காட்சிகளை நேரில் பார்த்தால் பிரமை பிடித்து போகும்.

நாய் கறிதான்...
நாகாலாந்துவாசிகள் வசிக்கும் இடங்களில் நாய்களை பார்த்துவிட்டாலே போதும்... அது கூறு போடப்பட்டு விடும். நமது வீடுகளில் ஆடு கோழி அடிப்பது போலதான் நாய்களைக் கருதுகிறார்கள்.

நாய் கடத்தல்
இந்த நிலையில் அஸ்ஸாமில் இருந்து நாகாலாந்துக்கு வேன் ஒன்றில் நாய்கள் கடத்தப்படுவதாக அமாநில போலீசாருக்கு புகார் போனது. இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் பிளாஸ்திரி போட்டு அடைக்கப்பட்டிருந்த 75 நாய்களுடன் ஒரு வாகனம் சிக்கியது.

25 நாய்கள் மரணம்
இது தொடர்பான விசாரணையில் நாகாலாந்துக்கு இறைச்சிக்காக தெருநாய்களை பிடித்து செல்வதாக வேன் ஓட்டுநர் கூறியுள்ளார். வேனில் அடைக்கப்பட்டதில் மூச்சு திணறி 25 நாய்கள் இறந்து போயிருந்தன.

4 பேர் கைது
உயிருடன் இருந்த நாய்கள் மீட்கப்பட்டன. நாய்களைக் கடத்தியதாக நாகாலாந்தைச் சேர்ந்த 4 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications