மேற்கு வங்க 7ஆம் கட்ட தேர்தல்.. 75.06 சதவீத வாக்குகள் பதிவு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற 7-ம் கட்ட சட்டசபை தேர்தலில் மொத்தம் 75.06 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை ஆறு கட்ட தேர்தல் அங்கு நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், இன்று அங்கு 34 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 280க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வாக்குப்பதிவு நடைபெற்றது.
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தற்போது எம்எல்ஏவாக உள்ள பவானிபூர் தொகுதியிலும் இன்றுதான் தேர்தல் நடைபெற்றது. ஆனால், இந்த முறை மம்தா பவானிபூரில் போட்டியிடவில்லை. அவர் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த முறை பாவனிபூர் தொகுதியில் திரிணாமுல் மூத்த தலைவரும் அமைச்சருமான சோவந்தேப் சட்டோபாத்யாய் போட்டியிடுகிறார். ஏற்கனவே கூச் பிகாரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக இன்று மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. உள்ளூர் போலீசாருடன் சேர்ந்த சுமார் 796 கம்பெனி மத்திய ஆயுத போலீஸ் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இன்றைய வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் 75.06 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications