184 ராணுவ வீரர்களை மீட்க வந்த மியான்மர் விமானம் மிசோரமில் விபத்தில் சிக்கியது- 8 பேர் படுகாயம்!
அய்ஸ்வால்: இந்தியாவில் தஞ்சம் அடைந்த 184 ராணுவ வீரர்களை மீட்க வந்த மியான்மர் விமானப் படை விமானம் மிசோரம் மாநிலம் லெங்குபி விமான நிலையத்தில் தரை இறங்கிய போது விபத்துக்குள்ளானது. மியான்மர் விமானத்தில் பயணித்த 8 பேர் படுகாயமடைந்தனர்.
மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு ஆயுதக் குழுக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய எல்லையில் உள்ள மியான்மர் ராணுவ முகாம்கள், நகரங்களை கிளர்ச்சி குழுவினர் கைப்பற்றி வருகின்றனர்.

இதனால் மியான்மர் ராணுவ வீரர்கள் அங்கிருந்து தப்பி இந்திய எல்லை கிராமங்கள் வழியாக நுழைந்து இந்திய பாதுகாப்பு படையினர் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை 200க்கும் மேற்பட்ட மியான்மர் ராணுவ வீரர்கள், இந்தியாவுக்குள் நுழைந்து தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களை அடுத்தடுத்து மியான்மர் ராணுவத்திடம் ஒப்படைத்து வருகின்றனர் பாதுகாப்பு படையினர்.

இதன் ஒரு பகுதியாக 184 மியான்மர் ராணுவ வீரர்களை இந்திய பாதுகாப்பு படையினர் அந்நாட்டிடம் ஒப்படைக்க தயாராக இருந்தனர். இந்த ராணுவ வீரர்களை அழைத்து செல்வதற்காக மிசோரம் மாநிலத்தின் லெங்குபி விமான நிலையத்தில் மியான்மர் விமானப் படை விமானம் தரை இறங்கியது. அப்போது அந்த விமானம் திடீரென விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 14 பேரில் 8 பேர் படுகாயமடைந்தனர். 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இவ்விபத்தில் சிக்கி காயமடைந்த 8 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications