குஜராத் பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து: 8 பேர் பலி
வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு நகரங்களில் ஏராளமான பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் ரஸ்தம்புரா கிராமத்தில் உள்ள பட்டாசுக் கடையில் வெள்ளிக்கிழமை மாலை விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறின.

இதனால் கடைகள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளித்தன. தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த வெடிவிபத்தில் சிக்கி 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக குஜராத்தில் நாதியாத் மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டாசு கடையில் நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வண்டிகளுடன் வந்த வீரர்கள் 2 மணி நேரமாக போராடி தீணை அணைத்தனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications