உ.பியில் திருமண விழாவில் கார் புகுந்து விபத்து: சினிமா பார்த்துக் கொண்டிருந்த 9 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

லகிம்பூர்ஹெரி: உத்திரப்பிரதேசத்தில் திருமணக்கூட்டத்தில் கார் புகுந்ததில் 9 பேர் பரிதாபமாக உடல் நசுங்கிப் பலியாகி உள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் மிட்டாவாள மாவட்டத்தில் உள்ள குர்த் கிராமத்தில், திருமண விழாவையொட்டி கிராம மக்கள் கண்டு களிக்கும் விதமாக சாலை ஓரமாக, திருமண வீட்டார் சார்பாக இரவு நேரத்தில் சினிமா திரையிடப்பட்டது.

கிராம மக்கள் சினிமாவை ரசித்துக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத விதமாக சாலையில் வந்த கார் ஒன்று கூட்டத்தில் புகுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 4 பேர் பரிதாபமாகப் பலியானார்கள்.

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்தார்கள். மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மக்கள் கூட்டத்தில் காரை விட்டு விபத்தை ஏற்படுத்தியவர் குடி போதையில் இருந்ததாகக் கூறப் படுகிறது. கிராமமக்கள் குற்றவாளியைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். விபத்து குறித்துப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த திருமண நிகழ்ச்சி, கார் விபத்து சம்பவத்தால் துக்க கோலம் பூண்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+