தந்தை தாயை கொலை செய்ததை பார்த்தும் பயத்தில் தூங்குவது போன்று நடித்த சிறுமி
மும்பை: மும்பையில் 9 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையை தாயின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கியதை பார்த்தும் பயத்தில் தூங்குவது போன்று நடித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கந்திவ்லி பகுதியைச் சேர்ந்தவர் நிதின் பன்ட்கர்(37). குடிப்பழக்கம் உள்ள அவருக்கு தனது மனைவி சுரேகாவுக்கு யாருடனோ கள்ளத்தொடர்பு உள்ளது என்ற சந்தேகம். 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு சமிக்ஷா(9) என்ற மகளும், யுவ்ராஜ்(7) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு நிதின் கத்தியை எடுத்து தனது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். தூங்கிக் கொண்டிருந்த சமிக்ஷா கண்விழித்து தனது தாய் கொல்லப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சப்தம் போட்டால் தந்தை தன்னையும் கொலை செய்துவிடுவார் என்று அஞ்சி தூங்குவது போன்று நடித்தார்.
இந்நிலையில் நிதின் தனது மனைவியின் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவத்தை எல்லாம் பார்த்த சமிக்ஷா அதிர்ச்சியில் உறைந்தார். நிதின் தாகூர் கிராமத்தில் உள்ள சாய் மோட்டார் பயிற்சி பள்ளியில் கார், பைக் ஓட்ட கற்றுக் கொடுப்பவராக பணியாற்றி வந்தவர்.
சம்பவம் நடந்த இரவு 11 மணி வரை நிதினின் சகோதரி உமா அவர்கள் வீட்டில் இருந்துள்ளார். மறுநாள் காலை சிறுமி தனது அத்தை உமா வீட்டிற்கு ஓடிச் சென்று தான் பார்த்த கொடுமையை விவரித்தார். உடனே நிதினின் வீட்டிற்கு ஓடி வந்த உமா அங்கு தனது சகோதரரும், அவரது மனைவியும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சிறுமி போலீசாரிடம் கூறுகையில்,
தூங்கிக் கொண்டிருக்கையில் திடீர் என்று கண் விழித்தேன். என் அப்பா அம்மாவின் மார்பு மீது அமர்ந்து அவரது முகத்தில் தலையணையை வைத்து அமுக்கினார். பின்னர் என் அம்மாவின் கழுத்தை கத்தியால் அறுத்தார். அம்மா இறந்தபிறகு அப்பா சேலையால் தூக்கு போட்டார். ஆனால் சேலை கிழியவே அவர் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
இதை எல்லாம் பார்த்தும் எனக்கு பயத்தில் யாரையும் உதவிக்கு அழைக்க தோன்றவில்லை. தூங்குவது போன்று நடித்ததில் எப்பொழுது தூங்கினேன் என தெரியவில்லை. கண் விழித்ததும் அத்தையிடம் இதை கூறினேன் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications