90 வயது மூதாட்டியை வீடு புகுந்து பலாத்காரம்: 53 வயது காமக்கொடூரனுக்கு சாகும் வரை சிறை
90 வயது மூதாட்டியை வீடு புகுந்து பலாத்காரம் செய்த காமக்கொடூரனுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோலாப்பூர்: மகாராஷ்டிர மாநிலம் அருகே 90 வயது மூதாட்டியை வீடு புகுந்து பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோலாப்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோலாப்பூர் மாவட்டம், புதர்கட் தாலுகாவில் நகன்வாடி கிராமத்தை சேர்ந்தவர் விஷ்ணு கிருஷ்ண நலவாடே(53). கடந்த 2015, மார்ச் 4-ஆம் தேதியன்று இதே ஊரைச் சேர்ந்த 90 வயது மூதாட்டியின் வீட்டுக்கு அத்துமீறி நுழைந்தார்.

அப்போது அங்கு தனியாக பாட்டியை வலுக்கட்டாயமாக விஷ்ணு பலாத்காரம் செய்தார். அந்த மூதாட்டி நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்தபோதும் விஷ்ணு காமக்கொடூரனாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் புதர்கட் போலீஸார் விஷ்ணுவை கைது செய்தனர். அவருக்கு எதிரான வழக்கு கோலாப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அதிதி கதம், குற்றவாளி விஷ்ணுவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். குற்றவாளியின் செயல் மனிதநேயமற்றது என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications