தள்ளாத வயதில்.. முதுகு வலியுடன்.. சாலையோர செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் 91 வயது தாத்தா!- வைரல் வீடியோ!
குர்கான்: டெல்லியில் குர்கானில் 91 வயது முதியவர் ஒருவர் தனது முதுகு வலியையும் பொருட்படுத்தாமல் சாலையோரத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
சமூகவலைதளங்களில் எல்லாம் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அப்படி அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என பார்த்தோமேயானால் அதில் 91 வயது முதியவர் நமக்கு கற்றுத் தரும் பாடம்தான்.
இன்று மரங்கள், நீர் நிலைகள் ஆகியவற்றை அழித்து வீடு கட்டியும், தொழிற்சாலைகளை அமைத்தும் வருகிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

நீராதாரம்
நிலத்தடி நீராதாரமும் இல்லாமல் மக்கள் கோடை காலங்களில் வறட்சியை சந்திக்கிறார்கள். எனவே வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என அரசாங்கம் சொல்கிறது. அதை கேட்போர் வெகு சிலரே. அந்த வகையில் 91 வயது முதியவர் ஒருவர் குர்கானில் அதிகாலையில் எழுந்து சாலையோர செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி நிதின் சங்வான் பகிர்ந்துள்ளார்.
|
முதியவர்
அந்த வீடியோவில் தினமும் ஒரு முதியவர் கையில் ஜக்குடன் சாலையோரங்களில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறார். அவர் அதிகாலை 4 அல்லது 5 மணிக்கெல்லாம் இந்த வேலையை செய்கிறார். சாலையோரத்தில் உள்ள செடிகளை அந்த முதியவர் தத்தெடுத்துக் கொண்டார்.

முதியவருக்கு நன்றி
அந்த செடிகள் மாநகராட்சியால் வைக்கப்பட்டன. அவை பராமரிப்பின்றி காணப்படுவதால் இந்த முதியவர் தனது முதுகு வலியையும் பொருட்படுத்தாமல் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மக்கள் அந்த முதியவருக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

முதியவரின் அறிவுரைகள்
முதியவர் அனைவருக்கும் இன்ஸ்பிரேஷனாக உள்ளார் என்றும் அவருக்கு நாம் வணக்கம் செலுத்த வேண்டும் என்றும் ஒரு வலைஞர் தெரிவித்தார். அது போல் அவரது அர்ப்பணிப்பை நாம் பாராட்ட வேண்டும். சமூகத்தின் உண்மையான இந்த பொக்கிஷமான முதியவரின் அறிவுரைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்கிறார் ஒரு வலைஞர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications