ஷாக்கிங்.. மேகாலயாவில் கொரோனாவுக்கு பலியானோரில்.. 92%.. வாக்சின் போடாதவங்களாம்!
மேகாலயாவில் தடுப்பூசி போடாதவர்கள் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர்
கேங்டாக்: மேகாலயா மாநிலத்தில் ஒரு ஷாக்கிங் செய்தி வந்துள்ளது. அதாவது அங்கு கொரோனாவுக்குப் பலியானவர்களில் 92 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களாம். இதை அந்த மாநில முதல்வர் கான்ராட் சங்மா கூறியுள்ளார்.
இந்த 92 சதவீதம் பேரும் சிங்கிள் டோஸ் கூட போடாதவர்கள். வாக்சின் போடுவதன் அவசியத்தை இனியாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சங்மா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிறருக்கு 100 சதவீத அளவுக்கு தடுப்பூசி போடுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். மேகாலயாவில் பலி எண்ணிக்கை சதவீதமானது 1.68 ஆக உள்ளது. இது நாகாலாந்து மாநிலத்தை விட குறைவாகும். பிற வட கிழக்கு மாநிலங்களில் இதை விட மரண எண்ணிக்கை குறைவாக உள்ளது.
தடுப்பூசி போடுவதில் மேகலாயாவில் 74 சதவீத சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 48 சதவீதம் பேருக்கு 2வது தவணை போடப்பட்டுள்ளது. இதுவரை மேகலாயாவில் மொத்தம் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சில மக்கள் பிரதிநிதிகள் தடுப்பூசிக்கு எதிராக பேசி வருகின்றனர். மக்களை குழப்பி வருகின்றனர். அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மக்களைக் காக்க வேண்டியது அவர்களது கடமை. அதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். உலகமே தடுப்பூசி போடும்போது நாம் மட்டும் போடாமல் இருக்க முடியாது. தடுப்பூசியால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்படுவதாக ஆய்வுகளும் கூட கூறுகின்றன" என்றார் சங்மா.












Click it and Unblock the Notifications