அண்ணன் மாதிரி! நம்பிக்கையாக பழகிய சிறுமி.. கூட்டாக சீரழித்த கும்பல்.. வீடியோவை ரிலீஸ் செய்த கொடுமை

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் மீண்டும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க கடுமையான தண்டனைகள் மட்டும் போதாது, உளவியல் ரீதியான மாற்றமும் வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

குற்றங்கள்

குற்றங்கள்

பெண்களையும் குழந்தைகளையும் தெய்வமாகவும், உயர்ந்த இடத்திலும் வைத்து பார்க்கும் பாரம்பரியம் கொண்ட இந்தியாவில்தான் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி கடந்த 2021ல் மட்டும் நாடு முழுவதும் 33,348 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 91 வழக்குகள். ஒரு மணி நேரத்திற்கு மூன்று வழக்குகள்.

கூட்டு பாலியல் வன்கொடுமை

கூட்டு பாலியல் வன்கொடுமை

இது வெறும் பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்த புள்ளிவிவரங்கள்தான். குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு கோணங்களில் வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. அந்த எண்ணிக்கை இதைவிட அதிகம். இவ்வாறு இருக்கையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இதேபோன்று மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8 இளைஞர்களால் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அதனை அந்த கயவர்கள் வீடியோ எடுத்து வைத்துள்ளனர்.

வீடியோ எடுத்து மிரட்டல்

வீடியோ எடுத்து மிரட்டல்

இந்த வீடியோவை காட்டி அடிக்கடி சிறுமியை வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் ரூ.50,000 கொடுத்தால் மட்டுமே இந்த வீடியோவை வெளியிட மாட்டேன் என்று அந்த இளைஞர்கள் மிரட்டியுள்ளனர். பின்னர் இந்த தொகையை ரூ.2.5 லட்சமாக உயர்த்தியுள்ளனர். இவ்வளவு பணம் கொடுக்காவிட்டால் வீடியோவை லீக் செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். சிறுமியால் இந்த பணத்தை கொடுக்க முடியாத காரணத்தால் இளைஞர்கள் அந்த வீடியோவை லீக் செய்துள்ளனர்.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

இது சிறுமியின் தந்தையின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதை கண்டு அதிர்ந்துபோன தந்தை கதறி அழுதுள்ளார். ஏனெனில் இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தந்தையிடம் எதுவும் சொல்லவில்லை. தனது மகள் எவ்வளவு கொடுமைகளை எதிர்கொண்டுள்ளார் என்பதை உணர்ந்த தந்தை உடனடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிறுமி பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரணம்

காரணம்

பெண்களையும் குழந்தைகளையும் தெய்வமாகவும், உயர்ந்த இடத்திலும் வைத்து பார்க்கும் பாரம்பரியம் கொண்ட இந்தியாவில்தான் 17 வயது சிறுமியை 8 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான குற்றங்களை குறைக்க பாலியல் கல்வியும், சிறு வயதிலிருந்தே பெண் என்பவள் சக மனுஷி என கற்பித்து குழந்தைகளை வளர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், பெண்களை போக பொருளாக சித்தரிக்கும், திரைப்படங்கள், விளம்பரங்கள், புத்தகங்கள் என யாவற்றையும் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+