டெல்லியில் 20 வயது பெண் பலாத்காரம்.. பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய 5 சிறுவர்கள் அட்டூழியம்!

டெல்லியில் 20 வயது பெண்ணை பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திய இளைஞர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டெல்லியில் 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவர்கள்- வீடியோ

    டெல்லி: ஜகான்கிரிபுரியில் 20 வயது பெண்ணை பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திய சிறுவர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு கொஞ்சம் பாதுகாப்பில்லாத நகரங்களின் பட்டியலில் டாப்பில் உள்ளது டெல்லி.

    டெல்லி ஷாலிமார் பாக் பகுதியில் கடந்த வாரம் தான் டீனேஜ் பெண் ஒருவர் மூன்று பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

    5 சிறுவர்கள் அட்டூழியம்

    5 சிறுவர்கள் அட்டூழியம்

    டெல்லி ஜஹாங்கிரிபுரி பகுதியில் உள்ள குப்பை கிடங்கு வழியாக 20 வயது பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை இரவு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 5 பேர் அந்த பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    கொன்று விடுவதாக மிரட்டல்

    கொன்று விடுவதாக மிரட்டல்

    சத்தம்போட்டோலோ அல்லது நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினாலோ போலீஸ்க்கு போனாலோ கொன்றுவிடுவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த அந்த பெண் சத்தம்போடாமல் இருந்துள்ளார்.

    உறவினரிடம் கதறல்

    உறவினரிடம் கதறல்

    பின்னர் மறுநாள் வியாழக்கிழமை மதியம் தனது உறவினர் ஒருவரிடம் அந்த பெண் நடந்ததை கூறி கதறியுள்ளார். இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

    தீவிர விசாரணை

    தீவிர விசாரணை

    கூட்டு பலாத்காரம் என வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளிப்படிப்பை நிறுத்தியவர்கள்

    பள்ளிப்படிப்பை நிறுத்தியவர்கள்

    பாலியல் பாலத்காரத்தில் ஈடுபட்ட 5 பேரும் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்கள் என்பதும், அவர்கள் நகராட்சி குப்பை கிடங்கில் பார்ட் டைம் வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது. அவர்கள் 18 வயதை கடந்தவர்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற போலீசார் 18 தாண்டியர்வர்களாக இருந்தால் இன்று நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்படுவார்கள் என்றனர். ஆனால் அவர்கள் டீனேஜை கடக்காதவர்கள் என்று கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+