உ.பியில் அதிர்ச்சி: பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்து கோவிலில் வைத்து உயிருடன் எரித்து கொன்ற கும்பல்
உத்தரப்பிரதேசத்தில் வீட்டிலிருந்த பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் அவரை கோவிலில் வைத்து உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வீட்டிலிருந்த பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் அவரை அவரை கோவிலில் வைத்து உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார்.
இந்நிலையில் அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் உன்னாவ் பகுதியில் வீட்டில் இருந்த பெண்ணை இழுத்து சென்று 3 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்தது.

உன்னாவில் நடந்த பயங்கரம்
அதனை வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் வெளியிட்டது அந்த வெறிபிடித்த கும்பல். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

இழுத்து சென்று கொலை
குழந்தைகளுடன் வீட்டில் இருந்த பெண்ணை இழுத்துச்சென்ற ஒரு கும்பல் அந்த பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்ததோடு உயிருடன் தீ வைத்து எரித்து கொன்றுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உபியில் தொடரும் கொடூரம்
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாபால் மாவட்டம் குன்னார் பகுதியை சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர் இந்த கொடூரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் காசியாபாத்தில் பணிபுரிந்து வருகிறார்.

வீட்டில் குழந்தைகளுடன்
இந்த தம்பதிக்கு 2 குழந்கைள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி கணவர் வேலைக்கு சென்றதை அடுத்து தனது குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார் அந்த பெண்.

பலாத்காரம் செய்த கும்பல்
அப்போது 5 பேர் கொண்ட ஒரு கும்பல் வீட்டிற்குள் புகுந்து உள்ளது. பின்னர் அவர் பலமுறை கெஞ்சி மன்றாடியும் அவரை விடாமல் அந்த கும்பல் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.

உயிருடன் எரித்து கொலை
பின்னர் அந்த பெண்ணை அருகில் இருந்த கோவிலுக்கு இழுத்துச்சென்ற அந்த கும்பல் அவரை உயிருடன் எரித்துள்ளது. இதில் அந்த பெண் உடல் கருகி உயிரிழந்தார்.

5 பேர் மீது வழக்குப்பதிவு
கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அராம் சிங், மகாவீர், சரண் சிங், குலு மற்றும் போனா ஆகிய 5 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

பெரும் அதிர்ச்சி
அவர்கள் 5 பேர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ள போஸீசார் தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர். வீட்டில் இருந்த 2 குழந்தைகளின் தாயை இழுத்து சென்று 5 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications