பைக்கில் சென்றவர் மீது கொட்டிய மர்ம கெமிக்கல்.. அதே இடத்தில் பலி.. டெல்லியில் பரபரப்பு!
டெல்லியில் பைக்கில் சென்றவர் மீது கொட்டிய மர்ம கெமிக்கல் காரணமாக அந்த நபர் அதே இடத்தில் பலியாகி உள்ளார்.
டெல்லி: டெல்லியில் பைக்கில் சென்றவர் மீது கொட்டிய மர்ம கெமிக்கல் காரணமாக அந்த நபர் அதே இடத்தில் பலியாகி உள்ளார்.
டெல்லியில் காசியாபாத் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. காசியாபாத் அருகே உள்ள ஜோரி என்க்லேவ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.
இது எப்படி நடந்தது என்று போலீசுக்கு தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடந்தது என்ன
அமித் சவுகான் என்ற 37 வயது நபர் தன்னுடைய பைக்கில் சென்ற போதே, மேலே இருந்து சாரல் போல கெமிக்கல் ஒன்று கொட்டி இருக்கிறது. இதனால் நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்துள்ளார். அருகே பைக்கில் வந்த 17 வயது நிரம்பிய ராகுல் என்பவரும் இதில் காயம் பட்டு இருக்கிறார்.

இறந்தார்
இவர்களை வெகுவேகமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள். இவர்கள் உடலில் அந்த கெமிக்களால் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் சவுகான் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது. ராகுல் மோசமான காயங்களுடன் தப்பித்து இருக்கிறார். இவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மெட்ரோ பணி
இவர்கள் பைக் ஓட்டி சென்ற இடத்திற்கு மேல் புதிய மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. இதில் இருந்து இந்த கெமிக்கல் கொட்டி இருக்குமா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளது.

விளக்கம் அளித்துள்ளார்
இந்த நிலையில் டெல்லி மெட்ரோ நிர்வாகம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. மெட்ரோ பணியில் எந்த கெமிக்கலும் பயன்படுவதில்லை என்றுள்ளனர். இதற்கு வேறு காரணம் இருக்கலாம், அதை போலீஸ் விசாரிக்க வேண்டும் என்றுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications