இப்படியும் நடக்கலாம்.. பெண்களே உஷார்!
டெல்லி: இன்டர்நெட்டில் இன்று எல்லாமே நடக்கிறது.. நல்லதும் நடக்கிறது. பொல்லாததும் நடக்கிறது. பலர் இதில் பயன் பெறுகிறார்கள். பலர் சிக்கி சிதைகிறார்கள்.
இன்டர்நெட்டில் வீடியோ சாட் மிகப் பிரபலம். ஆனால் இந்த வீடியோ சாட் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது.. நமது வெப் காம் பாதுகாப்பானதா.. அதில் நாம் மட்டுமே தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்கிறோமா என்று யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை. அதிலும் ஹேக்கர்கள் புகுந்து விளையாடுகிறார்கள்.
எனவே பிரைவேட் வீடியோ சாட் என்ற பெயரில் இருந்தாலும் அதுவும் அம்பலமாகும் அபாயம் அதிகமாகவே உள்ளது. ஹேக்கர்கள் நினைத்தால் எந்த மாதிரியான வீடியோ சாட்டையும் ஹேக் செய்து தூக்கி எடுக்க முடியும்.
இப்படிப்பட்ட சிக்கலில் சிக்கிக் கொண்டால் என்னாகும்.. எப்படியெல்லாம் நம் மானம் போகும்.. அதை இந்த சம்பவம் விளக்குகிறது.
ஒரு இளம் பெண் தனது காதலருடன் வீடியோ சாட்டை ஆரம்பிக்கிறார். காதலர் சற்று கோபமாக இருக்கிறார். இதனால் அவரை சாந்தப்படுத்தும் வகையில் பேசுகிறார். அப்போது அந்த காதலர், என்னை கூல் செய்ய வேண்டும் என்றால் நான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்கிறார். காதலியும் சரி என்கிறார்.
உன் டிரஸ்ஸைக் கழட்டு என்கிறார் காதலர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் காதலி என்ன இது என்று கேட்கிறார். இருந்தாலும், காதலருக்காக டிரஸ்ஸைக் கழட்டுகிறார். மேலாடையைக் கழட்டிய காதலியிடம், கீழே உள்ளதையும் கழட்டச் சொல்கிறார் காதலர். காதலியோ வெகுவாக தயங்குகிறார். இருந்தாலும் காதலருக்காக அதையும் செய்யத் துணிகிறார்..
நிற்க.. இதுவரை நடந்ததெல்லாம் உண்மைச் சம்பவம் அல்ல. ஒரு விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்ட செட்டப் தான். இந்த வீடியோவின் இறுதியில், உங்களது தனிப்பட்ட வீடியோ சாட்டை எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்தலாம், கவனமாக இருக்க வேண்டும் பெண்களே என்ற எச்சரிக்கை வாசகத்துடன் முடிகிறது.
குறிப்பாக காதலர் சொல்லி விட்டார், கணவர் சொல்லி விட்டார் என்பதற்காக கேமரா முன்பு ஆடைகளை அவிழ்ப்பது, இன்ன பிற தனிப்பட்ட விஷயங்களில் ஈடுபடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த படம் நமக்கு உணர்த்துகிறது.
இன்டிவைரல் வெளியிட்டுள்ள இந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது யுடூயூபில் வைரல் ஆகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications