கங்கையில் மூழ்கினால் 'கேன்சர்'... கும்பமேளா நீரை சோதித்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவல்!
ஹைதராபாத்: கங்கை நீரில் மூழ்கி எழுந்தால் புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர் ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மைய ஆராய்ச்சியாளர்கள்.
கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கும்பமேளா திருவிழாவின் போது சேகரிக்கப் பட்ட கங்கை நீரின் மாதிரிகளை ஆய்வு செய்தது ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மையம்.
அந்த ஆய்வு முடிவுகளின் படி, கங்கை நீரில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சு தாக்கம் இருப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

மோடியின் வாக்குறுதி...
கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப் படும் என்ற வாக்குறுதியின் படி, அதற்கான வேலைகளில் அதிகாரிகளை நியமித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், அவர் கூறியதை விட கங்கையில் அதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டி இருக்கும் என சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை...
கங்கையில் மூழ்கிக் குளித்தால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கி விடும் என்ற நம்பிக்கை பெரும்பாலான மக்களின் மனதில் உள்ளது. ஆனால், அந்நீரில் புற்றுநோயை உண்டாக்கும் முக்கிய தாது அதிகளவில் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கங்கையில் மூழ்கிக் குளிப்பவர்களுக்கு புற்றுநோய் உண்டாகலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குரோமியம் 6....
பக்தர்கள் பூஜைக்காக சேகரித்த தண்ணீரில் குரோமியம் 6 கலந்திருந்ததாக சோதனை மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. குரோமியம் அத்தியாவசியமானது மட்டுமில்லாமல் நச்சுத்தன்மையும் கொண்டதாகும். நச்சுத்தன்மை நிறைந்த குரோமிய வகை இந்தத் தண்ணீரில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் 50 மடங்கு அதிகமாக இருந்தது என்று என்சிசிஎம் தலைவரான டாக்டர் சுனில் ஜெய்குமார் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் அபாயம்...
அதிகரித்த அளவில் காணப்படும் இந்த நச்சுத்தன்மையானது புற்றுநோய் உட்பட பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய தன்மை கொண்டது என ஜெய்குமார் குறிப்பிடுகின்றார்.

தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகள்...
கங்கை இவ்வாறு அசுத்தமானதற்கு முக்கியக் காரணம், கான்பூரில் செயல்படும் தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகளே எனக் குற்றம் சாட்டப் படுகிறது. எனவே இத்தகைய அசுத்தங்களையும் நீக்கக்கூடிய அளவில் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் கங்கையில் பயன்படுத்தப்படவேண்டும் என்றும் ஜெய்குமார் கூறுகிறார்.

சோதனைக் கருவிகள்...
இதுமட்டுமின்றி நீரில் உள்ள ஃபுளோரைட் தன்மையைக் கண்டறிய உதவும் சோதனைக் கருவிகளும் இந்த ஆய்வு மையத்தில் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் விற்பனைக்கும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications