For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்துக் கோவிலை படம் எடுத்த இங்கிலாந்து நபர் பலி... எப்படி நடந்தது?

இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுப் பயணத்திற்கு வந்த ரோஜர் என்ற நபர் இந்துக் கோவிலை படம் பிடிக்கும் போது கீழே விழுந்து மரணமடைந்தார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

போபால்: இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுப் பயணத்திற்கு வந்த ரோஜர் என்ற பயணி மத்திய பிரதேசத்தில் கோவில் ஒன்றைப் படம் பிடிக்கும் போது கீழே தவறி விழுந்து மரணமடைந்தார்.

ரோஜர் ஸ்டோஸ்பரி என்ற 56 வயது நிரம்பிய நபர் இந்தியாவின் பழமையை தெரிந்து கொள்ளவும், இந்தியாவின் கட்டிடக் கலையை ரசிக்கவும் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வந்திருந்தார். தன்னுடைய மனைவியுடன் இந்தியா வந்த இவர் , வட மாநிலங்களை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

A England man died while taking picture at a temple in India.

இந்த நிலையில் ஒரு வீடியோ எடுப்பதற்காக மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஆர்ச்சா என்ற நகரத்தில் இருக்கும் லக்ஷ்மி நாராயண் கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலின் கட்டிடங்களை தான் எடுக்கும் ஆவணம் படம் ஒன்றிற்காக வீடியோ எடுத்துள்ளார்.

இந்த நிலையில் அவர் கோவிலின் மேல் பகுதியில் இருந்து, அந்த நகரம் எப்படி இருக்கிறது என்பதை வீடியோ எடுப்பதற்காக மேலே எறியுள்ளார். அப்படி வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது கீழே பார்க்காமல் அப்படியே நடந்த அவர் கால் தவறி மாடியில் இருந்து விழுந்திருக்கிறார்.

சம்பவத்தை நேரில் பார்த்த அவரது மனைவி அந்த இடத்திலேயே மயங்கி இருக்கிறார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.

English summary
A 56 year old British man Roger Stotesbury fell and died while taking picture at a temple in India. His dead body will brought back to london after examine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X