6 குழந்தைகளை கருணைக் கொலை செய்ய ஜனாதிபதி அனுமதியை கோரும் தந்தை
ஆக்ரா: அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது 6 குழந்தைகளை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி ஆக்ராவைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் நசிர்(42). ஸ்வீட் கடை வைத்துள்ளார். அவரது மனைவி தபசும். அவர்களுக்கு 8 குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகனும், இளைய மகளையும் தவிர மற்ற 6 குழந்தைகள் கனாவன் என்ற அரிய வகை நரம்பு கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் குழந்தைகளின் வளர்ச்சி தாமதமாவதுடன் காலப்போக்கில் அவர்களால் நடக்க முடியாமல் முடங்கிவிடுவார்கள்.

இந்நிலையில் இது குறித்து நசிர் கூறுகையில்,
என் 6 குழந்தைகளுக்கு வைத்தியம் பார்த்து பார்த்து அலுத்துவிட்டேன். நான் ஒரு சாதாரண ஸ்வீட் கடை உரிமையாளர். என்னால் இவ்வளவு தான் செய்ய முடியும். அதனால் தான் அவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளேன். இல்லை என்றால் என் குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு உதவுமாறு கோரிக்கை விடுக்க உள்ளேன் என்றார்.
ஆக்ரா மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,
முதல்வர் அலுவலக அதிகாரிகள் நசிர் குடும்பத்தை நேரில் சந்தித்துள்ளனர். அவர்களின் ஆதார் மற்றும் பிபிஎல் கார்டுகளை வாங்கியுள்ளனர். விரைவில் அவர்களுக்கு உரிய உதவி செய்யப்படும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications