குடியரசு தலைவர் மாளிகையில் திடீர் தீ விபத்து-உடனடியாக அணைக்கப்பட்டதால் சேதம் தவிர்ப்பு
குடியரசுத் தலைவர் மாளிகையின் கணக்குப் பிரிவில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. விரைந்த வந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கணக்குப்பிரிவு அலுவலகத்தில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் உடனடியாக தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ மாளிகையான ராஷ்டிரப்பதி பவனில் இன்று காலை 8.45 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து 6 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து கணக்குப்பிரிவு அலவலக அறையில் ஏற்பட்டுள்ளது. இதில் அந்த அறையில் இருந்த இன்வெர்ட்டர், நாற்காலி மற்றும் மேசை சேதமடைந்தது.
மின்கசிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி ராஜ்பாத்தில் உள்ள ராஷ்டிரப்பதி பவன் பிரிட்ஷ் ஆட்சியின் போது கடந்த 1929ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் லோக்சபா சேனல் கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications