ஓயாமல் சாட்டிங்.. கண்டித்த மனைவி.. தோழியுடன் சேர்ந்து தற்கொலை செய்த கணவர்!
தெலுங்கானாவில் ஓயாமல் சாட்டிங் செய்த கணவரை மனைவி கண்டித்ததால் கணவர் தோழியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செகந்திராபாத்: தெலுங்கானாவில் ஓயாமல் சாட்டிங் செய்த கணவரை மனைவி கண்டித்ததால் கணவர் தோழியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் செகந்திராபாத் நகரில் கிழக்கு மரெட்பள்ளி பகுதியில் வசித்து வந்தவர் சிவ குமார். 27 வயதான இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார்.
இவருடன் சிறுவயது முதலே தோழியாக பழகி வருபவர் 19 வயதான வெண்ணிலா. இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு 15ந்தேதி சிவகுமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் ஆன நாள் முதலே தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தம்பதிகள் எலியும் பூனையுமாக சண்டைபோட்டு வெறுப்பை கக்கி வந்துள்ளனர்.
[ சிவகங்கையில் நீதிபதி இருக்கையில் முனியசாமி.. அரிவாளுடன் அமர்ந்ததால் பரபரப்பு! ]

விடிய விடிய சாட்டிங்
இந்த நிலையில் ஆன்லைன் வழியே மெசேஜ் ஆப் ஒன்றில் சிவகுமார் தொடர்ந்து சாட்டிங் செய்து வந்துள்ளார். இது புது மனைவிக்கு தெரியவரவே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் சிவ குமார் மற்றும் வெண்ணிலா இருவரும் இரவு பகல் என பாராமல் விடிய விடிய சாட்டிங் செய்து வந்துள்ளனர்.

மின்விசிறியில் தூக்கு
தனது கணவர் பெண் ஒருவரிடம் எப்பொழுதும் சாட்டிங் செய்து வருகிறார் என்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் மனைவி. இதனால் வருத்தம் அடைந்த சிவ குமார் கடந்த சனிக்கிழமை வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தோழி தற்கொலை
இதனையறிந்த சிவகுமாரின் தோழி வெண்ணிலா மனவேதனை அடைந்துள்ளார். நண்பர் இறந்த துக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாத வெண்ணிலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துள்ளார். இதனை அறிந்த வெண்ணிலாவின் பக்கத்துவீட்டு தோழி அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி வெண்ணிலா நேற்று உயிரிழந்தார்.

பெரும் அதிர்ச்சி
இதுபற்றி போலீசார் 2 தனி வழக்குகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாட்டிங் செய்ய மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால் புது மாப்பிள்ளையும் அவரது தோழியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications