சிவகங்கையில் நீதிபதி இருக்கையில் முனியசாமி.. அரிவாளுடன் அமர்ந்ததால் பரபரப்பு!
சிவகங்கை: சிவகங்கையில் நீதிபதி இருக்கையில் முனியசாமி என்பவர் அரிவாளுடன் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு ஆயத்தம் செய்யப்பட்டு வந்தது. அப்போது நீதிபதி இருக்கையில் ஒருவர் அரிவாளுடன் அமர்ந்தார்.

இதை கண்ட வழக்கறிஞர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். பின்னர் அவரை போலீஸார் கைது செய்தனர். இதில் அவர் காரைக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த முனியசாமி என்பது தெரியவந்தது.
["கோர்ட்டே சொல்லிருச்சு கள்ளக்காதல் தப்பில்லையாம்".. அதிர்ந்த மனைவி.. தூக்கில் தொங்கினார்!]
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அரிவாளுடன் இருக்கையில் அமர்ந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது முனியசாமி கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரு வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு, ஜாமீன் பெற்றார். மேலும் தொடர்ந்து சில வழக்குகளில் தொடர்புடைய அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதன்பேரில் இவரை ஆஜர்படுத்திய நிலையில் வாராவாரம் குற்றவியல் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவின் பேரில் அவர் கையெழுத்திட இன்று வந்தபோது வழக்காடும் இடத்தில் யாரும் இல்லாததால் அங்கிருந்த கோயிலில் இருந்து அரிவாளை எடுத்து வந்து நீதிபதி இருக்கையில் அமர்ந்தது தெரியவந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications