"கோர்ட்டே சொல்லிருச்சு கள்ளக்காதல் தப்பில்லையாம்".. அதிர்ந்த மனைவி.. தூக்கில் தொங்கினார்!
கள்ளக்காதல் விவகாரம் காரணமாக மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை: "சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சு கள்ள காதல் தப்பில்லைன்னுட்டு.. உன்னால என்னை என்ன செய்ய முடியுமோ செய்துக்கோ" என்று சொன்ன கணவனின் பதிலால் இடிந்து போன மனைவி தூக்கிலே தொங்கிவிட்டார்.
சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வருபவர் ஜான்பால் பிராங்க்ளின். இவரது மனைவி புஷ்பலதா, ஜான்பால் தான் வசித்து வரும் பகுதியில் உள்ள ஒரு கார்ப்பரேஷன் பூங்காவில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார்.
[ மக்களுக்கு இருக்குற பிரச்சினை போதாதா.. இதுவேறையா.. எஸ்பிஐ வங்கியின் புது அறிவிப்பை பாருங்க! ]

கள்ள தொடர்பு
இது ஒரு லவ் மேரேஜ்தான். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஆனாலும் ரெண்டு பேருக்கும் ஓயாமல் சண்டை இருந்துள்ளது. அதற்கு காரணம் ஜான்பால் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததுதான். பூங்காவில் வேலை பார்த்த ஒரு பெண்ணிடம்தான் கள்ள உறவு நீடித்து வந்துள்ளது.

ஜான்பால் பிடிவாதம்
இந்த விஷயம் புஷ்பாவுக்கு தெரிய வர தினம் தினம் குடும்பத்துக்குள் சண்டைதான்! "உன்னை நான் ரொம்ப நம்பினேனே, எனக்கு துரோகம் செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது?" என்று புஷ்பா கணவனிடம் எவ்வளவோ அழுது பார்த்தார்.. சொல்லி பார்த்தார்.. கெஞ்சி பார்த்தார்... ஆனால் ஜான்பால் அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டிக்கவேயில்லை.

ஃபேனில் தற்கொலை
இந்நிலையில் நேற்று முன்தினமும் இதே பிரச்சனை வெடித்து தகராறு ஆரம்பமானது. அப்போது புஷ்பா, "இப்படி எனக்கு துரோகம் செய்தால் நான் போலீசுக்கு போய்விடுவேன்" என்று கணவனிடம் சொல்லி இருக்கிறார். அதற்கு ஜான்பாலோ, "சுப்ரீம் கோர்ட்டே கள்ளக்காதல் தப்பு இல்லைன்னு சொல்லிடுச்சு. போய் வேலைய பாரு" என்று பதிலளித்துள்ளார். இதனால் மனம் நொந்து, இடிந்து போன புஷ்பா, தன் வீட்டிலேயே உள்ள ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உருக்கமான கடிதம்
இந்த சம்பவம் குறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தற்கொலை செய்து கொண்ட பெண் புஷ்பலதா எழுதிய கடிதத்தை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் கைப்பற்றினர். அதில், "தனது குழந்தையை கணவன் கள்ளக்காதலியிடமே அடிக்கடி தூக்கிக் கொண்டு போய் கொடுத்து விடுவதாகவும், அது தான் கணவனுக்கு மகிழ்ச்சி என்றால், தான் இறந்த பிறகாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும்" என்றும் புஷ்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மனித குல நீதி
விசாரணை ஒரு பக்கம் இருக்கட்டும்!! தகாத உறவும் சரியே என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நாடு முழுவதும் அதிர்வலையை மட்டும் இல்லாமல் உயிர்களையும் காவு வாங்க ஆரம்பித்திருக்கிறது. "ஆண், பெண் இருவரின் சம்மதத்துடன் நடந்தால் தகாத உறவு தப்பில்லை" என்கிறது சட்டம். "ஒருவனுக்கு ஒருத்திதான்" என்கிறது சமுதாயம். இதில் எதை நம்புவது? எதை பின்பற்றுவது? எதை பாதுகாப்பது? எங்கு சென்று நாம் நீதி கேட்பது? விளங்கவே இல்லை இந்த மனித குல நீதி!
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications