அடக்கொடுமையே!.. இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவர் போட்ட நாடகம்.. புதுமனைவிக்கு நேர்ந்த கொடூரம்
ஜார்க்கண்ட: திருமணமாகிய 4 மாதத்தில் இன்சூரன்ஸ் பணம் ரூ. 30 லட்சத்துக்காக மனைவியைக் கொன்று சாலை விபத்தில் உயிரிழந்தது போல கணவர் நாடகம் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஜார்க்கண்ட் காவல் துறையினர் அவரைக் கைது சிறையில் அடைத்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம், ஹஜாரிபாக் பதாமா அருகே முகேஷ்குமார் மேத்தா (30), செவந்திகுமாரி (23) தம்பதி வசித்து வந்துள்ளனர். இந்தத் தம்பதிக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், செவந்திகுமாரிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. முகேஷ்குமார் செவந்திகுமாரியை மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

இன்சூரன்ஸ் பணம்
அப்போது, செவந்திகுமாரி உயிரிழந்தால் 30 லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீடு பணம் வரும் என்பதற்காக திடீரென முகேஷ்குமார் அவரை ஹெல்மாட்டால் தலையில் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொன்றுள்ளார். புது மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, அதனை சாலை விபத்து போல மாற்றி நாடகம் போட்டுள்ளார். தன் மீது சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக அவருக்கும் சிறு சிறு காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சாலை விபத்தில் செவந்திகுமாரி உயிரிழந்ததாக அனைவரும் நினைத்த நிலையில், முகேஷ்குமாரின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவர் புதுமனைவியை கொலை செய்த தகவல் வெளியாகியுள்ளது.
மயங்கி கிடந்த தம்பதி
இதுகுறித்து, காவல் நிலைய அதிகாரி சஞ்சித்குமார் துபே கூறியதாவது: கணவன், மனைவி இருவர் சாலை விபத்தில் சிக்கி பதாமா - இட்கோரி தேசிய நெடுஞ்சாலையில் காயங்களுடன் மயங்கி கிடப்பதாக திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின்பேரில் உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
காயமடைந்திருந்த முகேஷ்குமார் மேத்தா (30) மற்றும் அவரது மனைவி செவந்தி குமாரி (23) ஆகியோரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, செவந்தி குமாரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். காயங்களுடன் இருந்த முகேஷ் குமாருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தனர்.
இறுதிச்சடங்கு
இதைத்தொடர்ந்து செவந்தகுமாரியின் இறுதிச் சடங்கு நடைபெற்றுள்ளது. அப்போது, அவரது கணவர் முகேஷ் குமாரின் செயல்பாடுகள் உறவினர்களிடையேயும், அப்பகுதி மக்களிடையேயும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில், முகேஷ் குமாரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், முகேஷ்குமார், செவந்திகுமாரி உயிரிழந்துவிட்டால் விபத்துக் காப்பீடு தொகை ரூ. 30 லட்சம் கிடைக்கும் என்பதற்காக திட்டமிட்டு கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. செவந்திகுமாரிக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், அவரை சிகிச்சைக்காக இரு சக்கர வாகனத்தில் முகேஷ்குமார் அழைத்துச் சென்றதும், அந்த சந்தர்ப்பை பயன்படுத்தி மனைவியை ஹெல்மட்டால் தலையில் சரமாரியாக அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்து தெரியவந்துள்ளது.
நாடகம் போட்ட கணவர்
தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக முகேஷ்குமார் தனக்குத் தானே சிறு காயங்களை உடலில் ஆங்காங்கே ஏற்படுத்திக் கொண்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் முகேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமணமான 4 மாதங்களில் இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது மனைவியை கணவரே அடித்துக் கொலை செய்துவிட்டு நாடகம் போட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications