டயருக்கு அடியில் சிக்கிய மனிதர்.. 70 கிமீக்கு இழுத்து சென்ற ஓட்டுநர்.. பெங்களூர் பேருந்தில் கொடூரம்
குன்னூரில் இருந்து பெங்களூர் சென்ற பேருந்தில் ஒருவர் டயருக்கு அடியில் சிக்கி மரணம் அடைந்து இருக்கிறார்.
Recommended Video

பெங்களூர்: குன்னூரில் இருந்து பெங்களூர் சென்ற பேருந்தில் ஒருவர் டயருக்கு அடியில் சிக்கி மரணம் அடைந்து இருக்கிறார். இது கர்நாடக மாநிலத்திற்கு சொந்தமான பேருந்தாகும்.
இவர் மொத்தம் 70கிமீக்கு இழுத்து செல்லப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடனத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தை விளக்கிய ஓட்டுநர் அதிர்ச்சி அளிக்கும் தகவலை கொடுத்துள்ளார்.

குன்னூரில் இருந்து பெங்களூர் வரை
கர்நாடக அரசின் வோல்வோ வகை பேருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு, உதகை மாவட்டம் குன்னூரிலிருந்து பெங்களூர் கிளம்பி உள்ளது. மைசூர் சாலை வழியாக அந்த பஸ் பெங்களூர் பயணித்தது. மொஹினுதீன் என்ற ஓட்டுநர் இதை இயக்கி இருக்கிறார்.

சிறிய விபத்து
இந்த பேருந்து பெங்களூருக்கு வெளியே 70 கிமீ இருக்கும் போது சிறிய கல் போன்ற எதோ ஒன்றில் மீது மோதியுள்ளது. ஓட்டுனருக்கு சிறிய சத்தம் மட்டும் கேட்டு இருக்கிறது. ஆனால் அவர் கண்ணாடியில் எதுவும் தெரியவில்லை என்றதும் எப்போது போல கிளம்பி பெங்களூர் சாந்தி நகர் பேருந்து நிலையத்தில் காலை நிறுத்தி இருக்கிறார்.

அடியில் உடல்
பின் பேருந்து சர்விஸுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் பேருந்திற்கு அடியில் ஒருவர் மாட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின் 70 கிமீ முன்பு பேருந்தில் கேட்ட சத்தம் இவர் சிக்கிய சத்தம்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டயருக்கும், அடியில் பொருட்கள் வைக்கும் இடத்திற்கும் இடையில் அவர் மாட்டி இருக்கிறார்.

ஓட்டுநர் கைது
இறந்தது யார் என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று இன்னும் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications