தோஷம் இருக்கு.. "வச்சுக்குவோம்".. இல்லன்னா அப்பா செத்துடுவாரு: 4 ஆண்டுகள் மிரட்டியே சீரழித்த மாமா!
மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி மருமகளை 4 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த மாமாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி: மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி மருமகளை 4 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த மாமாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பல்வேறு வழிகளிலும் அரங்கேறி வருகிறது. இப்படிதான் என்றில்லாமல் கிடைக்கும் அனைத்து காரணங்களையும் வைத்து பெண்கள் வேட்டையாடப்படுகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் இளம்பெண் ஒருவர் 4 ஆண்டுகளாக தனது உறவினர் ஒருவரால் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணம் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.

மாங்கல்ய தோஷம்
டெல்லியை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணை அவரது தந்தை வழி மாமா மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளார். தோஷத்தை சரி செய்யாவிட்டால் அவரது தந்தை இறந்துவிடுவார் என்று கூறி மிரட்டி உள்ளார்.

இழுத்த இழுப்பிற்கெல்லாம்
இதனால் பயந்துபோன அந்த பெண் தன் தந்தை நன்றாக இருந்தால் சரி என அவரது மாமா இழுத்த இழுப்பிற்கெல்லம் சென்றுள்ளார். இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவரது மாமா நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த பெண்ணை சீரழித்து வந்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகும்
இந்த கொடுமை 4 வருடங்களாக நடந்து உள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகும் அவரது மாமா தோஷத்தை கழிக்க வேண்டும் என கூறி செக்ஸ்க்கு அழைத்துள்ளார்.

போலீஸில் புகார்
இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் உடனடியாக இந்த விஷயத்தை தனது கணவரின் தந்தையின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாமனார் மருமகளுடன் சென்று அந்த உறவினர் மீது போலீஸில் புகார் அளித்தார்.

மாமா கைது
போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கடந்த செப்டம்பர் 13 அன்று ஒரு புகார் பதிவு செய்தார். அன்றே குற்றம் சாட்டப்பட்ட தந்தை வழி மாமாவை போலீசார் கைது செய்தனர். 23 வயது இளம்பெண்ணை மாமாவே மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications