ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதி நியமனம்.. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதியை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது.
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதியாக ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
மனுவில் ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனியாக குழு அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆய்வு
இதை தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
மேலும், குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வல்லுநர்கள் இடம் பெற வேண்டும் என்றும், 6 வாரங்களுக்குள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

நீதிபதி விலகல்
இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி வசீப்தர் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், சொந்த காரணங்களுக்காக குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் வசீப்தர்.

தருண் அகர்வால் நியமனம்
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதியை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலை பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது.

6 வாரத்தில் ஆய்வு அறிக்கை
புதிய நீதிபதி தலைமையிலான குழு 6 வாரத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications