ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான டெல்லி மாணவன்.. அம்மா, அப்பா, தங்கையை கொன்ற கொடூரம்!
ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி போன மாணவன் ஒருவன், தனது பெற்றோர்களை கொலை செய்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

டெல்லி: ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி போன மாணவன் ஒருவன், தனது பெற்றோர்களை கொலை செய்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது ஆன்லைன் விளையாட்டு மிக பிரபலம். ராணுவ தாக்குதல் போல இருக்கும் இந்த விளையாட்டு கூட்டம் கூட்டமாகவோ இல்லை தனியாகவோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் எதிராளி மீது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தும்படி வடிவமைக்கப்பட்டு இருக்கும் ஆன்லைன் விளையாட்டு ஆகும்.
இதற்கு தற்போது தமிழக இளைஞர்கள் அதிக அளவில் அடிமை ஆகியுள்ளனர். இந்த நிலையில் இந்த விளையாட்டு காரணமாக பெரிய கொலை சம்பவம் ஒன்று டெல்லியில் நடந்துள்ளது.

கொலை செய்தான்
டெல்லியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவன் சுராஜ்தான் இந்த கொலையை செய்துள்ளது. தன்னுடைய அப்பா மிதிலேஷ், அம்மா சியா மற்றும் தங்கையை இவன் கொலை செய்துள்ளான். கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து இருக்கிறான். இவனை டெல்லி போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

நாடகம் ஆடினான்
முதலில் இவன் கொலை செய்துவிட்டு, வீட்டில் திருட வந்தவர்கள் கொன்றது போல நாடகம் ஆடியுள்ளான். வீட்டில் இதற்காக சில பொருட்களை வெளியே விற்றுவிட்டு, திருடு போனது போல இடத்தை மாற்றி வைத்துள்ளான். ஆனால் போலீசின் தொடர் விசாரணையில் இவன் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளான். மூன்று பேரையும் தான்தான் கொன்றது என்று ஒப்புக் கொண்டு இருக்கிறான்.

கேமிற்கு அடிமை
இவன் கடந்த சில மாதங்களாக அந்த ஆன்லைன் கேமிற்கு அடிமையாகி இருந்துள்ளான். இதற்காக வீட்டில் இருந்து காசு திருடி தனி வீடு கூட எடுத்துள்ளான். அந்த வீட்டில்தான் தன் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி வந்துள்ளான். இதற்காக பல நாட்கள் கல்லூரி செல்லாமல் கட் அடித்துவிட்டு சுற்றியுள்ளான்.

மிகவும் மோசம்
இவன் வீட்டில் உள்ளவர்களுடன் அடிக்கடி சண்டை போடுவான் என்று பக்கத்துவீட்டில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக மிக மோசமாக நடந்து கொண்டான் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இவன் நேற்று 3 மணிக்கு குடும்ப உறுப்பினர்களை கொலை செய்துள்ளான். தங்கையை கழுத்தறுத்து கொன்றுள்ளான்.

எதனால்
இந்த ஆன்லைன் விளையாட்டு சுடுவது, கொல்வது என்று முழுக்க முழுக்க வன்முறையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் விளையாட்டு ஆகும். இதன் காரணமாகவே இவனின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications