கேமராவை ஆன் செய்து விட்டு தூக்கில் தொங்கிய கள்ளக்காதல் ஜோடி.. கேரளாவில் அதிர்ச்சி
கேரளாவில் கள்ளக்காதல் ஜோடி ஒன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் கள்ளக்காதல் ஜோடி தாங்கள் தற்கொலை செய்து கொள்வதை கேமிராவில் ரெக்கார்ட் செய்தபடி உயிரரை மாய்த்துக்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத் பத்தனம்திட்டா மாவட்டம் அடூர், கொடுமண் பகுதியை சேர்ந்த ஜோஸ் என்பவரின் மகன் ரிஜோ ஜோஸ். 26 வயதான இவர் ஸ்டில் போட்டோகிராபராக பணிபுரிந்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் பேபி என்பவரின் மகள் ஷினு. இவருக்கு வயது 32. இவரது கணவர் அனு அபிரகாம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் மாரடைப்பால் இறந்துவிட்டார்.

கள்ளக்காதலாக மாறிய பழக்கம்
இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. இந்தநிலையில் ஷினு தன்னுடைய தங்கை ஷைனி வீட்டில் வசித்து வந்தார். இந்தசமயத்தில் ரிஜோ மற்றும் ஷினுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலானதாக கூறப்படுகிறது.

வீட்டிலிருந்து வெளியேறிய ரிஜோ
இந்த விவகாரம் ரிஜோ வீட்டினருக்கு தெரியவந்தது. ரிஜோவின் பெற்றோர் கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ரிஜோ கடந்த 6 மாதமாக அடூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தார்.

செல்போன் சுவிட்ச் ஆப்
இந்த நிலையில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நபர் ஒருவர் அவரது காரை எடுக்க ஷெட்டிற்கு வந்தார். அப்போது காரின் பின்புறம் ரிஜோவின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. தையடுத்து ராஜின் காரை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால், ரிஜோவை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டிருந்தது.

தூக்கில் தொங்கிய ரிஜோ
இதையடுத்து அந்த நபர், ரிஜோவின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். நீண்ட நேரம் ஆகியும் யாரும் வெளியே வரவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தபோது படுக்கை அறையில் ரிஜோ தூங்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மற்றொரு அரையில் தொங்கிய ஷினு
இதுகுறித்து உடனடியாக அவர் அடூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஒரு அறையில் ரிஜோவும் அடுத்த அறையில் ஷினுவும் தூக்கில் தொங்கி கொண்டிருந்தனர்.

ஆன் செய்யப்பட்டிருந்த கேமிரா
ரிஜோவின் அறையில் வீடியோ காமிரா ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்தது. அதுபோல் ஷினுவின் அறையில் செல்போன் காமிரா ஆன் செய்யப்பட்டிருந்தது. கள்ளக்காதல் ஜோடி தாங்கள் தற்கொலை செய்ததை படம்பிடிக்கும் நோக்குடன் கேமராவை ஆன் செய்து வைத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

போலீசார் விசாரணை
போலீசார் கேமராவை பரிசோதித்தபோது கழுத்தில் சுருக்குமாட்டுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications