நெருங்கும் க்ளைமாக்ஸ்.... 2ஜி வழக்கில் ஆ.ராசா உள்ளிட்டோரின் இறுதிவாதம் நிறைவு- தீர்ப்பு ஒத்திவைப்பு?
2ஜி ஊழல் முறைகேடு வழக்கில் இன்று ஆ. ராசா உள்ளிட்டோர் இறுதிவாதங்கள் முடிவடைந்தன. இதையடுத்து வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட உள்ளது.
டெல்லி: நாட்டையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய 2ஜி ஊழல் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்டோர் தமது இறுதிவாதங்களை இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நிறைவு செய்தனர். அனைத்து தரப்பு இறுதி வாதங்களும் முடிவடைந்த பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட உள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ1.70 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கணக்கு தணிக்கை அதிகாரி குற்றம்சாட்டியிருந்தார். நாட்டையே உலுக்கிய இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

அதேபோல் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் 2011-ல் சிபிஐ, 2014-ல் அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்தது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள். கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம்ச்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விசாரித்து வருகிறார்.
இவ்வழக்கில் சிபிஐ, அமலாக்கப் பிரிவு மற்றும் குற்றம்சாட்டப்பட்டோர் என அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து இன்று முதல் இருதரப்பும் இறுதிவாதங்களை முன்வைக்க நீதிபதி ஷைனி உத்தரவிட்டிருந்தார்.
இன்று ஆ.ராசா, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர் பெகுரா, ராசாவின் உதவியாளர் சந்தோலியா உள்ளிட்டோர் தமது இறுதி வாதங்களை நிறைவு செய்தனர். இறுதிவாதங்கள் நிறைவு செய்யப்பட்ட பின்னர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications