2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி விடுதலை.. டெல்லி சிபிஐ நீதிமன்றம் அதிரடி!
2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

2 ஜி வழக்கு- ஆ ராசா, கனிமொழி விடுவிப்பு- வீடியோ
டெல்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனை முன்னிட்டு நீதிமன்றம் அருகே திமுக தொண்டர்கள் வெடி வெடித்துக்கும் கனிமொழி கனிமொழி என கோஷமிட்டும் கொண்டாடி வருகின்றனர்.

6 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான திமுகவினர் குவிந்திருந்தனர்.
குற்றச்சாட்டுக்களை சிபிஐ நிறுபிக்க தவறியதால் 14 பேரையும் விடுவிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications