உ.பி டிஜிபி பெயரில் டிவிட்டர் கணக்கு தொடங்கி போலீசை ஆட்டிப்படைத்த பள்ளி மாணவன்.. அதிர்ச்சி காரணம்
உத்தர பிரதேச மாநில டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் பெயரில், டிவிட்டரில் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் கணக்கு ஆரம்பித்து, போலீசுக்கு நிறைய கட்டளைகள் இட்டு இருக்கிறான்.
Recommended Video

லக்னோ: உத்தர பிரதேச மாநில டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் பெயரில், டிவிட்டரில் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் கணக்கு ஆரம்பித்து, போலீசுக்கு நிறைய கட்டளைகள் இட்டு இருக்கிறான்.
போலீஸ் எல்லோரும் எந்த விஷயத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக இந்த செயலை அவன் செய்தான் என்று கூறப்படுகிறது. இவனது கட்டளைகளை போலீஸ் சில நாட்கள் கேட்டு, அதை நிறைவேற்றி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சந்தேகத்தின் பேரில், இந்த கணக்கை ஆராய்ந்த சைபர் போலீஸ், இது பொய்யான கணக்கு என்று கண்டுபிடித்தது. பின் விசாரணையில் அந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஏன் இப்படி செய்தான் என்பது தெரியவந்துள்ளது.

நடவடிக்கை இல்லை
இந்த பத்தாம் வகுப்பு மாணவனின் பெயர் வெளியிடப்படவில்லை. இவன் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான 40000 ரூபாய் பணம் இரண்டு மாதம் முன்பு காணாமல் போய் இருக்கிறது. இதையடுத்து இந்த சிறுவனும், அவனின் குடும்ப உறுப்பினரும் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீஸ் இதில் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளது.

பொய்யான கணக்கு
இதனால் கோபமடைந்த அந்த சிறுவன், உத்தர பிரதேச மாநில டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் பெயரில், டிவிட்டரில் பொய்யான கணக்கு ஒன்று உருவாக்கி இருக்கிறான். ஏற்கனவே டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் பெயரில், டிவிட்டரில் வேறு ஒரு உண்மையான கணக்கு இயங்கி வந்தது. இவன் அந்த பொய்யான கணக்கு மூலம், இந்த ரூ.40000 காணாமல் போன புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி லோக்கல் போலீசின் டிவிட்டர் கணக்கிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளான்.

பணம் கிடைத்தது
இதை பார்த்த லோக்கல் போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. பணமும் கண்டுபிடிக்கப்பட்டு, அவனின் குடும்ப உறுப்பினரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில நாட்களுக்கு பின் இரண்டு கணக்கு இருப்பதை கண்டுபிடித்த, சைபர் கிரைம் போலீஸ், பின் சோதனை செய்து இவனை பிடித்தது.

மன்னிப்பு
ஆனால் டிஜிபி ஓம் பிரகாஷ் சிங், அந்த சிறுவனை கைது செய்ய கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த சிறுவன் பள்ளி படிப்பதால், கைது செய்தால் தவறாக செல்ல வாய்ப்பு இருக்கிறது என்றுள்ளார். இந்த நிலையில் போலீஸ் அவனை கடுமையாக கண்டித்து அனுப்பி இருக்கிறார்கள்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications