கோழிக்கறி குழம்பு வைக்க லேட்.. பெற்ற தாயை கத்தியால் சரமாரியாக குத்தி துடிக்க துடிக்க கொலை செய்த மகன்

ஆந்திராவில் கோழிக்கறி குழம்பு வைக்க தாமதப்படுத்திய தாயை பெற்ற மகனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திராவில் கோழிக்கறி குழம்பு வைக்க தாமதப்படுத்திய தாயை பெற்ற மகனே கத்தியால் குத்தி துடிக்க துடிக்க கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் பொறுமையை இழந்து வரும் மனிதர்கள் தொட்டதற்கெல்லாம் அடிதடி கொலை என இறங்கிவிடுகிறார்கள். சமையல் சரியில்லை, சாப்பாடு ருசியாக இல்லை, சமைக்க தாமதம் போன்ற சிறு சிறு காரணங்களுக்கெல்லாம் கொலை நடப்பது அநியாயத்தின் உச்சம்.

இந்நிலையில் தாய் ஒருவர் கோழிக்கறி குழம்பு வைக்க தாமதப்படுத்திய காரணத்துக்காக பெற்ற மகனே அவரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குரூர சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.

பிஜம் கிஷோர்

பிஜம் கிஷோர்

ஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேர்ந்தவர் பிஜம் கிஷோர். 45 வயதான இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

பிரிந்து சென்ற மனைவி

பிரிந்து சென்ற மனைவி

கிஷோர் மதுவுக்கு அடிமையானவர் என்பதால் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் இவருடன் வாழவே முடியாது என்ற நிலைக்கு வந்த கிஷோரின் மனைவி அவரை பிரிந்து தனது குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.

கோழியுடன் வந்துள்ளார்

கோழியுடன் வந்துள்ளார்

இதையடுத்து தனது தாய் மாரியம்மாவுடன் கிஷோர் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்னர் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த கிஷோர் கையில் கோழியுடன் வந்துள்ளார்.
தனக்கு கோழிக்கறி குழம்பு சமைத்து வைக்கும்படி தாய் மாரியம்மாவிடம் கூறிவிட்டு மீண்டும் வெளியே சென்றுள்ளார் கிஷோர்.

கோழிக்கறி குழம்பு எங்கே

கோழிக்கறி குழம்பு எங்கே

பின்னர் சிறிது நேரம் கழித்து புல் மப்பில் வீட்டுக்கு வந்த கிஷோர் கோழிக்கறி குழம்பு எங்கே என தாயிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் இன்னும் சமைக்கவில்லை என கூறியுள்ளார்.

துடிக்க துடிக்க கொலை

துடிக்க துடிக்க கொலை

இதை கேட்டு ஆத்திரமடைந்த கிஷோர் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தாய் மாரியம்மாவை சரமாரியாக குத்தி துடிதுடிக்க கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து கிஷோர் தப்பியோடிவிட்டார்.

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மாரியம்மாவின் சடலத்தை கைப்பற்றிய நிலையில் கிஷோரை தேடி வருகிறார்கள். மதுபோதையில் கோழிக்கறி குழம்புக்காக பெற்ற தாயை மகனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+