ஆந்திராவில் அம்பேத்கர் சிலை உடைப்பு...போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை!!
கிழக்கு கோதாவரி: ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் அம்பேத்கர் சிலையை சில விஷக் கிருமிகள் உடைத்து இருப்பதற்கு கண்டனம் எழுந்துள்ளது. உடைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
கிழக்கு கோதாவரியில் ரசோல் மண்டலில் இருக்கும் கத்ரேணிபடு என்ற கிராமத்தில் அம்பேத்கர் சிலையை சிலர் உடைத்துச் சென்றுள்ளனர். சிலையின் மூக்குப் பகுதி சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிலை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

இதற்கு முன்பும் நாட்டின் பல்வேறு இடங்களில் இதுபோன்று சிலை உடைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரிஷிகேஷில் கடந்த ஆகஸ்ட் மாதம் இதேபோன்று அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து இருந்தனர். இதேபோல் 2019 ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அசம்பாவிதங்களை தடுப்பதற்காக புதிய சிலை ஒன்று உடனடியாக நிறுவப்பட்டது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications